சிறைதண்டணை முடிந்து சசிகலா விடுதலை
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன27) விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனை முடிவடைந்தது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர்.அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை செலுத்தியதால், சிறையில் இருந்த நாள்களைக் கணக்கிட்டு சசிகலா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்ததால் மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் விடுதலை ஆனதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சசிகலா விடுதலையைத் தொடர்ந்து இளவரசி, சுகாகரன் ஆகியோரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu