குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநா்

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநா்
X

நாட்டின் 72-வது குடியரசு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார்.

தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்துக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அதன்பின்பு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா தொற்று காரணமாக, பொது மக்கள், பாா்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business