அண்ணா பல்கலைக்கழகம்: ஆன்லைன் தேர்வுக்கான வழிமுறைகளை வெளியிட்டது

அண்ணா பல்கலைக்கழகம்: ஆன்லைன் தேர்வுக்கான வழிமுறைகளை  வெளியிட்டது
X

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்டநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது பொது முடக்கம் தளர்வடைந்த சூழலில் இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்த விபரங்கள் வருமாறு :

  • ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.
  • லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம்.
  • 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.
Next Story
ai in future agriculture