நடிகர் விஷ்ணு விஷால் - நிழலும் நிஜமும்
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரோட அப்பா ரமேஷ் குட்வாலா ஓய்வுபெற்ற டி.ஜி.பி. யாக இருந்தாலும் நடிகர் சூரியை ஏமாற்றியதாக ஒரு புகார் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எப்.ஐ.ஆர் என்ற படத்தில் தற்போது நடித்து முடித்து விரைவில் திரைக்கு வர உள்ளது. அது போக காடன், ஜெகஜ்ஜால கில்லாடி, மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நாயுடு தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர் மீது குடியிருப்பு செக்ரெட்டரி ரங்கபாபு காவல்துறையில் புகார்அளித்துள்ளார். கே.கே.நகரில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான இரு குடியிருப்புகளில் ஒன்றை அலுவலகமாகவும் மற்றொன்றை குடியிருக்கவும் பயன்படுத்தி வரும் விஷ்ணு மீது ஏற்கனவே குடியிருப்பு சட்டத்தை மீறி அலுவலகமாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி குடியிருப்பில் நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் போடுவதாகவும், அடிக்கடி பல்வேறு நபர்கள் வந்து செல்வதாகவும் புகார் அளித்துள்ள ரங்கபாபு ஸ்பீக்கர்களை வைத்து நடு இரவில் அதிக ஒலிஎழுப்பி பாடல்களை போட்டு குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை கொடுப்பதாக தற்போது புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நேற்று விஷ்ணு விஷாலிடம் எச்சரிக்க சென்றபோது வீட்டின் கதவை திறக்காததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் ரங்கபாபு. உடனடியாக கோட்டூர்புரம் காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து விஷ்ணு விஷாலிடம் விசாரிக்கும் போது அவர் ஆபாசமாக திட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அடுக்குமாடி குடியிருப்பு செக்ரெட்டரி ரங்கபாபு விஷ்ணு விஷாலின் நடவடிக்கை காரணமாக நிம்மதியாக குடியிருக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வீட்டில் 4 மாத குழந்தை இவர்களின் ஒலி காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக காவல்துறை கூடுதல் ஆணையருக்கு வாட்சாப் மூலம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், "நான் படப்பிடிப்பிற்காக சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிக்கலை. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகி இருக்குது. வேறு சில காரணத்தினால் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறாங்க" என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu