குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து

குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து
X

கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரையில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்.இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த விழாவை பார்க்க மக்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந் தோறும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!