பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் முடிவெடுப்பார்- மத்தியஅரசு

பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் முடிவெடுப்பார்- மத்தியஅரசு
X

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது; குடியரசுத் தலைவருக்கே அந்த அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்று நடந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குப் பதிலாக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.மேலும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 3 அல்லது 4 நாள்களுக்குள் முடிவெடுப்பார் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு தரப்பின் வாதத்தை அடுத்து பேரறிவாளன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

Tags

Next Story