சசிகலா உடல்நிலை சீராக உள்ளது,டிடிவி தினகரன்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது,டிடிவி தினகரன்
X

சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக டிடிவி தினகரன் பெங்களூரில் தெரிவித்தார்.

பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலாவின் உடல்நிலை நலிவுற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறும் போது,சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.'அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது.சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம்.சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!