இளைஞர்களின் வழிகாட்டி - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
"உன்னால் முடியும் தம்பி தம்பி!!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன் தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்"
"உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.உதயமூர்த்தி.
இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால் உன்னால் முடியும் தம்பி என்கிற படத்தை எடுத்ததுடன், படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றே பெயரிட்டார். இளைஞர்கள் தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த, எழுத்து மூலமும் பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் .
எம்ஜிஆரால் அழைத்துப் பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர். ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. 'பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர்.
விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா சென்றவர், 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றினார். 'சிறந்த தொழிலதிபர்' என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர். தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இளைஞன் ஒருவன் முரசறைவது போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம் ஆகும்.
செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர். இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசைச எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர், ரோட்டை சீரமைத்துக் கொண்டனர்.
தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர், அரசியலில் சூது, தந்திரம் அறியாதவர். அவரது எண்ணங்கள் இன்று வரை தமிழகத்திற்கு வழி காட்டுகிறது. எம்.எஸ்.உதயமூர்த்தி 80வது வயதில் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் ஜனவரி 21- 2013 அன்று காலமானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu