கனிமொழியிடம் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பிய வியாபாரிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலர் சந்தையாக தோவாளை மலர் சந்தை உள்ளது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா பகுதிகளில் விளைவிக்கப்படும் மலர்கள் தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருவாங்கூர் சமஸ்தான காலம் முதல் புகழ் பெற்று திகழும் இந்த மலர் சந்தை கடந்த திமுக ஆட்சியில் காவல்கிணறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்கள் கட்டப்பட்டு இப்போதும் பயனற்று காணப்படுகிறது,
வியாபாரிகள் தாங்கள் தொடர்ந்து தோவாளை மலர் சந்தையில் வியாபாரம் செய்வோம் எங்களுக்கு அதற்கான உதவிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு புதிதாக அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டி மீண்டும் தோவாளை மலர்ச்சந்தையை வியாபாரிகளுக்கு அளித்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று தோவாளை மலர் சந்தையில் இருந்து வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
முக கவசம் அணியாமல் வியாபார நேரத்தில் வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா விதிமுறைகளை புறந்தள்ளி விட்டு வந்த கனிமொழியிடம் ஒழுங்காக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மலர் சந்தையை மாற்ற திமுக முயற்சித்தது, ஆனால் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு தான் எங்களுக்கு புதிதாக கடைகள் கட்டி தந்து இன்றும் எங்கள் வாழ்வை மேம்படுத்தி வருகிறது ஆனால் இந்த சந்தை செயல்பட கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது,
தங்கள் ஆட்சிக் காலத்தில் வியாபாரிகளின் நலனில் அக்கறை காட்டாமல் வியாபாரிகள் நலனை பாதிக்கும் செயல்களை மட்டும் செய்து விட்டு இப்போது தங்களிடம் வாக்கு சேகரித்து வருவது எப்படி? என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கடந்த முறையும் கூறி எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் இப்போது மறுபடியும் எங்களை தேடி வருவதன் நோக்கம் என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளை வியாபாரிகள் எழுப்பினர்.
இதனால் அவசரம் அவசரமாக தோவாளை மலர் சந்தை விட்டு வெளியேறிய கனிமொழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu