பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு
X

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

அரசு பயணமாக புது டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை, வெள்ளங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டு அமித்ஷாவிடம் நேற்று முதல்வா் பழனிசாமி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்தல் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை பிரதமா் மோடியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!