தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு
X

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று காலை திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களிடம் நடந்த இரண்டாம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமிநாசினி வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், மாணவா்கள் பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்ட விவரங்களை பள்ளிக்கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர். பள்ளி வாயில்களில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டு, மாணவர்களின் உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai future project