சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
X

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகள், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பிற மாவட்டத்தினர் சென்னை திரும்ப வசதியாக, இன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு ஆயிரத்து 867 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நாளை பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 892 பேருந்துகளும், இதர இடங்களுக்கு ஆயிரத்து 536 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. ஜனவரி 11 முதல் 13 ம் தேதி வரை பொங்கலுக்காக பயணிகள் சொந்த ஊர் செல்ல வசதியாக இயக்கப்பட்ட 9 ஆயிரத்து 868 சிறப்பு பேருந்துகளில் 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது