ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டது அதிமுக அரசு: முதல்வர்

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டது அதிமுக அரசு: முதல்வர்
X

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்று அலங்காநல்லுாரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகுத்து கொடுத்தது அதிமுக அரசு தான் என்றார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நமது பாரம்பரியத்தை காக்க அதிமுக அரசு தூணாக இருந்து வருகிறது.ஜல்லிக்கட்டுக்கான தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்து தற்போது தொடர்ந்து சிறப்பாக நடைபெற அதிமுக அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது என்றார்.முதல்வரும், துணை முதல்வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்து பார்த்தனர். அப்போது சிறந்த வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள் பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!