தமாகா நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஞானதேசிகன். அவருக்கு வயது 71. கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி நெஞ்சுவலி காரணமாக கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலைக்கு ஆளானார். பின்னர், தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, நலமாக இருந்த நிலையில் இன்று திடீர் மாரடப்பால் காலமானார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தமாகா-வுக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்டவர், அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும் ஞானதேசிகனின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu