தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, பிற இடங்களைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பருவம் தவறி கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu