மாணவர்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைப்பு குழு

மாணவர்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைப்பு குழு
X

மாணவர்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிக்கு அருகாமையில் இருக்கக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மதிய உணவுத் திட்டத்தை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 மல்ட்டி விட்டமின் மற்றும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கவும், 18-ம் தேதிக்குள் மாணவர்களின் வருகையை பொறுத்து அந்தந்த பள்ளிகளுக்கு மாத்திரைகளை விநியோகம் செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ai and future cities