கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை, ராதாகிருஷ்ணன்

கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை, ராதாகிருஷ்ணன்
X

தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா தாக்கம் இன்றுவரை முடிந்த பாடில்லை. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவை கண்டு அஞ்சும் நிலை உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசை குணப்படுத்த பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது.

வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!