தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி, அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி, அரசு அறிவிப்பு
X

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கும்படி கோரியதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!