பெண்கள் குறித்த பேச்சு, உதயநிதிஸ்டாலின் வருத்தம்

பெண்கள் குறித்த பேச்சு, உதயநிதிஸ்டாலின் வருத்தம்
X

நான் பெண்கள் குறித்து தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி , சசிகலா குறித்து பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.மேலும் பாஜகவின் குஷ்பு, டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் பெண்களை தவறாக பேசவில்லை என்றும் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!