மாஸ்டர் ரிலீஸ் – எதிர்நோக்கும் சவால்கள்

மாஸ்டர் ரிலீஸ் – எதிர்நோக்கும் சவால்கள்
X
திரையரங்குக்களுக்கே விடிவு காலம் கொடுக்க போகுது என்ற நம்பிக்கையை கோலிவுட்டில் கொடுத்துள்ள மாஸ்டர் படம் திட்டமிட்டப்படி ஜனவரி 13-ம் தேதி வெளியிட ஜரூராக வேலை நடந்து வருகிறது .

இப்போது தினத்திற்கு எத்தனை ஷோக்களை வேண்டுமானலும் திரையிடலாம் என்று அரசு சிக்னல் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு 5 ஷோக்களுக்கு அதிமாகத் திரையிட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. காரணாம் மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது என்பதால் தியேட்டர்களுக்கு அடுத்தடுத்த ஷோக்களுக்கான நேரம் வேண்டும் என்பதால் தினமும் 5 காட்சிகளை மட்டுமே ஓட்ட முடியும் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.


இதனிடையே கோவை, மற்றும் சென்னை சிட்டி, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் படத்தைத் திருப்பிக் கொடுத்து காசைத் திருப்பிக் கேட்க அதையும் தயாரிப்பாளர் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலில் இறங்க.. இந்த முறை தமிழ்த் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீண்டும் லாக் டவுனை அறிவித்ததால் அங்கெல்லாம் 'மாஸ்டர்' படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

சிங்கப்பூரில் முழு லாக்டவுன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கே 'மாஸ்டர்' வெளியாக முடியவில்லை. மலேசியாவில் இன்னமும் தியேட்டர்கள் திறப்பு பற்றிய முடிவு அறிவிக்கப்படவில்லை.

இலங்கையிலோ தியேட்டர்களில் 25 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவால் அங்கும் வசூல் கிடைக்காத நிலைமை. இந்தச் சூழலில் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்கள் பலரும் தாங்கள் கொடுத்தத் தொகையைப் பெருமளவு குறைத்துக் கொள்ளச் சொன்னதால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அதையும் ஏற்றுக் கொண்டார்.

ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 'மாஸ்டர்' படம் ரிலீஸுக்கு முன்பேயே இப்போதே 75 கோடி நஷ்டத்தைச் சந்திக்கிறது என ஒருதரப்பு கூறுகிறது. இந்த நேரத்தில்தான் தானே அழைத்து வந்த தயாரிப்பாளர்தான் லலித்குமார் என்பதால் அவரது கடன் சுமையைக் குறைக்க வேண்டி நடிகர் விஜய் தன்னுடைய சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டாராம். இதனால் தற்போது முழுமையாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது மூச்சு விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் என்றும் சேதி வருது!

-மைக்கேல்ராஜ்

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!