அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
X

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள முத்தாலம்மன் கோவில் பீடத்தில் கால்கோள் ஊன்றும் விழா இன்று நடைபெற்றது. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட எஸ்பி., சுர்ஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரும் 16ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!