கொரோனாவை குறைத்த விதம் பாராட்டுக்குரியது :ஹர்ஷ்வர்தன்

கொரோனாவை குறைத்த விதம் பாராட்டுக்குரியது :ஹர்ஷ்வர்தன்
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இன்று தமிழகம் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. இதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தமிழகத்துக்கு வந்துள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. தன்னலம் பாராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!