நடிகை சித்ரா தற்கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்
X

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை ,காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தைக் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றக்கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்திருந்தார். சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!