சென்னை புத்தகக் காட்சி : பப்பாசி ஆர்வம்
வழக்கமாக ஜனவரியில் தொடங்கி பொங்கல் திருநாள் விடுமுறைகளில் நடைபெறும் சென்னை புத்தக காட்சி, 2021 இந்த ஆண்டு பெருந்தொற்றுகாரணமாக பொங்கல் விடுமுறை காலங்களில் நடத்த இயலவில்லை.
ஆனால் 44 வது சென்னைப் புத்தகக் காட்சியை வருகின்ற பிப்ரவரி அல்லது மார்ச் காலங்களுக்குள் நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கேட்டு பப்பாசி சார்பில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் பேரிடர் மேலாண்மை துறையில் அனுமதிக்காக காத்திருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடத்த பப்பாசி தயாராக உள்ளது.
கடந்த 8 மாதமாக புத்தக விற்பனை இல்லாத சூழலில் இந்த பொங்கல் விடுமுறை காலங்களில் வாசகர்களின் புத்தக ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில பதிப்பாளர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் அவர்கள் சக்திக்கு ஏற்றபடி சிறு சிறு புத்தக காட்சிகளை சென்னையை சுற்றி நடத்தி வருகிறார்கள்.
மேலும், "பப்பாசி நடத்தும் பிரம்மாண்டமான 44 வது சென்னை புத்தகக் காட்சி அரசு அனுமதி கிடைத்தவுடன், விரைவில் அதனுடைய சிறப்பு தன்மைகளோடு, பல்வேறு புதிய அம்சங்களுடன் சிறந்த பண்பாட்டு நிகழ்வாக நடைபெறும்" என தென் இந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பப்பாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.பப்பாசி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu