தமிழகஅரசின் பொங்கல்தொகுப்பு இன்றுமுதல் விநியோகம்

தமிழகஅரசின் பொங்கல்தொகுப்பு இன்றுமுதல் விநியோகம்
X

தமிழகஅரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 ரூபாய் பரிசுத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 2 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளது.பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், பயனாளர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future