அழகிரி கட்சி துவக்கம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது: வேலூரில் துரைமுருகன்

X
அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுக கூட்டணியில் உள்ள கடசிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை - வேலூரில் துரைமுருகன் பேட்டி

காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட டி.கே.புரம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை எதிர்த்து கேரளா தீர்மானம் இயற்றி உள்ளது. அதிமுக விற்க்கு ஞாபகம் வராது என்பதால் இதே போல் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லை இல்லையென்றாலும் சுயபுத்தியாவது இருக்க வேண்டும், இதன் பின்பாவது தீர்மானம் இயற்ற வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை, எல்லா கட்சிகளுக்கும் தனி கொள்கை இருக்கின்றது என்றார்

Next Story
ai solutions for small business