அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி உதயமாகிறது
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்குபவர், அதிக ரசிகர்களை கொண்ட இவரது திரைப்படங்கள் வெளியாகும் போது பெரும் வரவேற்பு எப்போதும் இருக்கும். விஜயின் தந்தை அவரது பெயரில் கட்சியை ஆரம்பித்தார், நடிகர் விஜய் இதை விரும்பவில்லை என்பதால் அக்கட்சியை களைத்தார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
இந்நிலையில் இன்று விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எஸ்.ஏ.சந்திரசேகர், அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க மீண்டும் முடிவு செய்துள்ளார்.
பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை இணைக்க முடிவு செய்துள்ளார். இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு 20மாவட்ட பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சி நியமித்துள்ளார், இந்த தகவல் அறிந்த நடிகர் விஜய் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும், அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிந்ததாகவும் கூறி தனது புது நிர்வாகிகளை உற்சாகமடையச் செய்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu