புகழேந்தியின் பிரார்த்தனைபடி நடக்க முடியாது,கமலஹாசன்

புகழேந்தியின் பிரார்த்தனைபடி நடக்க முடியாது,கமலஹாசன்
X

புகழேந்தியின் பிரார்த்தனை படி நான் நடக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னையில் பேட்டியின் போது கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேட்டியின் போது கூறியதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கான அடுத்த கட்ட பிரசாரம் விரைவில் தொடங்க இருக்கின்றோம் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும். தற்போது நடந்துள்ள பிரச்சாரம் ஒரு நம்பிக்கை அளிக்கும் பிரசாரமாக அமைந்துள்ளது. மக்கள் வெயிலிலும் மழையிலும் எங்களை வரவேற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக வாழ்த்து சொல்லியது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரிக்க நட்பு ரீதியாக நேரம் கேட்டு உள்ளேன் என்றார்.அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ரஜினி போலவே கமலும் அரசியலில் இருந்து விலகுவார் என கூறிய கருத்திற்கு அது அவருடைய பிரார்த்தனை அவர் கூறிய படி நான் நடக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!