சசிகலா விடுதலை ஆனாலும் அரசியலில் மாற்றம் வராது -முதல்வர் பழனிச்சாமி
வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்தார்,
இதனை தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மற்றும் திருவரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனையடுத்து திருச்சி ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என எற்கனவே முனுசாமி கூறிவிட்டார்.
ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதோ, அந்த கட்சிகள் தற்போதும் இருக்கிறது. புதிதாக வேறு கட்சிகள் இணைவது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.
சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது. நாட்கள் குறைவு என்பதால் என்பதால் பல இடங்களுக்கு சென்று பிராச்சாரத்தை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.தேர்தலில் வெற்றி பெற கூட்டணிகள் அமைக்கப்படுகின்றது.
நான் அரசியல் இருக்கும் வரை எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுவேன். மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் போட்டியிட்டு திமுகவை காப்பாற்றுவதை முதலில் பார்க்கட்டும்.
ஊழல் பட்டியல் கொடுத்தவருக்கு டெண்டர் ஒரு வருடம் முன்பு ரத்து செய்யப்பட்டது தெரியவில்லை. இரவு பகல் பார்க்காமல் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் .
பெரும்பான்மையான இடங்களில் மக்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கட்சித்தலைமை கூட்டணி குறித்து அறிவிப்பார்கள்.
உட்கட்சி பூசல் என்பது அ.தி.மு.க வில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கிறது என கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu