கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பில்லை : ஜெயக்குமார்

கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பில்லை : ஜெயக்குமார்
X

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 738 விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் அறிவு சார்ந்த கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்த 15 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளனர்.இதுவே வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் .இதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியே போகாது என்றார்.தொடர்ந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை ஏன் என்ற கேள்விக்கு, திமுக ஒரு ஓடாத சினிமா அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என எனவும், தாங்கள் புகழ் வெளிச்சத்தில் இருப்பதால் தங்களைப் பற்றி அதிகம் பேசுவதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story