அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் :அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக உடன் ஏற்பட்ட கூட்டணி தற்போதும் தொடர்கிறது இன்னும் தேர்தலுக்கு நாட்கள் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.மேலும் பல கட்சிகள் கூட்டணியில் வர வாய்ப்பு உள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்தபின்பு அதிமுக தலைமைக்கழகம் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடும்.அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். அதில் எல்லோரும் இடம் பெறுவார்கள் பின் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu