அரசியலில் ரஜினி போல் கமல்ஹாசனும் முடிவெடுக்க வேண்டும் புகழேந்தி

அரசியலில் ரஜினி போல் கமல்ஹாசனும் முடிவெடுக்க வேண்டும் புகழேந்தி
X

அரசியலில் ரஜினிகாந்த் எடுத்த முடிவு போலவே கமல்ஹாசனும் எடுக்க வேண்டுமென சென்னை விமான நிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டியின் போது கூறினார்.அரசியலில் ரஜினி போல் கமல்ஹாசனும் முடிவெடுக்க வேண்டும் புகழேந்தி

சென்னை விமானநிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,ரஜினிகாந்த் மிக உயர்ந்த மனிதர் என்பதை அவரின் அறிக்கை மூலம் காண முடிகிறது. அவர் உடல்நலம் கருதி ஒரு நல்ல முடிவை நேற்றையதினம் வெளியிட்டிருந்தார்.ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உடல் நிலை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்த் போலவே இதுபோன்ற முடிவு எடுப்பார் என நான் நம்புகிறேன். அரசியலில் கமல் தொடர மாட்டார். ரஜினிகாந்துக்கு ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கை போலவே கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கடலில் பெய்த மழை போல கமலஹாசனின் உழைப்பு வீண் போய்விடும் என்பது அவருக்கும் தெரியும் எனவே அதை உணர்ந்து அவரும் ரஜினிகாந்த் எடுத்த முடிவைப் போல முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.

திமுக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இது மக்களை திசை திருப்பும் முயற்சி, தமிழக அரசு தொடங்கியுள்ள மினி கிளினிக் திட்டமும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்தது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது திமுகவுக்கு பாதகமாக ஆகிவிட்டது எனவே அதை திசை திருப்பவே ஆளுநரிடம் திமுக புகார் மனுவை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!