/* */

லண்டன் துபாய் வழியே சென்னை வந்த பெண் தனிமைப்படுத்தல்

லண்டன் துபாய் வழியே சென்னை வந்த பெண் தனிமைப்படுத்தல்
X

லண்டனிலிருந்து துபாய் வழியாக வந்த மத்தியப்பிரதேச இளம்பெண்ணுக்கு சென்னை விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதணை நடத்தி பின்பு தனிமைப்படுத்துவதற்காக சென்னை நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டாா்.

லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த பயணிகளுக்கு நடந்த குடியுறிமை சோதனையில் ஒரு பெண் பயணி லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள் விமானநிலைய சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.உடனடியாக மருத்துவ குழுவினா் அந்த பெண்ணிடம் விசாரித்தனா்.அவா் மத்தியப்பிரதேசம் போபால் நகரை சோ்ந்த 21 வயது இளம் பெண்.அவா் லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்துவிட்டு,இங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் போபால் செல்லவிருந்ததும் தெரியவந்தது.ஆனால் சுகாதாரத்துறையினா் அந்த பெண்ணின் போபால் பயணத்தை ரத்து செய்தனா்.

அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதணை நடத்தினா்.அதன்பின்பு பரிசோதனை முழு முடிவு வரும்வரை அந்த பெண் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினா்.அதன் பின்பு அப்பெண் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டாா்.ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்பு சென்னை விமானநிலையத்தில் இதுவரை லண்டனிலிருந்து வந்த 29 பயணிகள்,மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Dec 2020 10:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...