வாழ்க்கை ஊகிக்க முடியாதது, தந்தை மறைவு குறித்து அனிதாசம்பத் உருக்கம்

வாழ்க்கை ஊகிக்க முடியாதது, தந்தை மறைவு குறித்து அனிதாசம்பத் உருக்கம்
X

வாழ்க்கை ஊகிக்க முடியாதது என தனது தந்தை மறைவு குறித்து அனிதாசம்பத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

செய்தி வாசிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான அனிதா சம்பத், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி. சம்பத் காலமாகியுள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி. சம்பத், தனது மகனுடன் சீரடி சென்று சென்னைக்கு ரயிலில் திரும்பும்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டகிராமில் அனிதா சம்பத் தெரிவித்ததாவது:

என் தந்தை உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகத் தனிமைப்படுத்துவதற்கு முன்பு அவரைக் கடைசியாகச் சந்தித்தேன். பிக் பாஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது அவர் சீரடிக்குச் சென்றிருந்தார். அவருடைய போனில் தொடர்பு கொள்ள முடியாததால் நான் பேசவும் இல்லை. இன்று காலை 8 மணிக்கு இந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சீரடியிலிருந்து திரும்பும்போது ஆந்திராவின் அருகே ரயிலில் உயிரிழந்துள்ளார். அப்பா நீ வீட்டுக்கு நடந்து வர வேண்டும். உங்களிடம் நிறைய பேச வேண்டும். உங்கள் குரல் கேட்டு 100 நாள்கள் ஆகிவிட்டன.

தெரிந்திருந்தால் முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அப்பாவுடன் சிறிது நாள் இருந்திருப்பேன். என் அப்பா இனி திரும்ப வரமாட்டார். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் காப்பாற்றப்பட்டிருந்தால் என்னால் கடைசியில் கூட அப்பாவைப் பார்த்திருக்க முடியாது. வாழ்க்கை ஊகிக்க முடியாதது என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!