உத்தரகோசமங்கை கோவில் நடராசருக்கு சந்தனக் கலைப்பு
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராசருக்கு சந்தனம் கலையும் அபிஷேகம் இன்று தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ஆலயத்தில் மரகத நடராசர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. ஆலயத்தில் உள்ள ஒரே கல்லில் ஆன மரகத நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. பால், பன்னீர், இளநீர், திரவியம், மஞ்சள், உள்ளிட்ட 32 வகையான பொருள்களைக் கொண்டு நடராசருக்கு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.
மூலவர் பச்சை மரகத நடராசர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல்நாள் சந்தனக்காப்பு கலையும் அபிஷேகமும் நடைபெறுவது சிறப்பாகும். இதைக்காணவும், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடராசர் சந்தனக்காப்பு இன்றி காட்சி தருவதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வது வழக்கம்.இந்தாண்டு சந்தனக்காப்பு கலையும் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராசருக்கு ஆருத்ரா மகாபிஷேகம் தொடங்கும். நாளை (டிச.30) அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu