மதுரை மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு !

மதுரை மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு !
X

கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான சமாதான் சேலஞ்ச் ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. இந்நிலையில் மாணவர் யோக பாலாஜியை கௌரவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் மாணவர் யோக ராஜ் மற்றும் அவரின் குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business