திருச்செந்தூர் கோவிலில் கிடைத்த முருகன் சிலை பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை

திருச்செந்தூர் கோவிலில் கிடைத்த முருகன் சிலை  பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
X

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று இருக்கும் முருகன் சிலையை பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடக்கின்றது.அனைவரும் போற்றி வழிபடும் முருகக் கடவுளின் சிலை, எந்த வழிபாடும் இன்றி கடற்கரையில் தூய்மையற்ற சூழலில் இருப்பது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே கோயில் நிர்வாகம் விரைவாக இந்த முருகன் சிலையை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture