திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
X
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர்ஆலயத்தில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சனிபெயர்ச்சிக்கு மக்கள் அதிகம் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை 48 நாட்கள் சனிபெயர்ச்சிக்கான பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் , தமிழகம், பாண்டிச்சேரி என மக்கள் பலரும் வருவதுண்டு.

இந்த சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தா்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அா்ஜூன் சா்மா கட்டுபாடுகளை விதித்திருந்தார். பக்தர்கள் பலரும் இது சிரமத்தை ஏற்படுத்துவதாக கருதினர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

"சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story
ai solutions for small business