காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைச்சர் ஜவடேகர் சவால்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைச்சர் ஜவடேகர் சவால்
X

வேளாண்சட்டங்கள் குறித்து விவாதத்திற்கு தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் ஜவடேகர் சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் விவசாயிகளின் போராட்டங்களை சத்தியாக்கிரகம் என்று அழைத்ததோடு, மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று பண்ணை சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜவடேகர் மத்திய அரசின் வேளாண்சட்டங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!