பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்

பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்
X

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது

பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன், 2500 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 பரிசுத் தொகையைப் பெற இன்று (26 ம் தேதி) முதல் வரும் 30ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு கடையில் முற்பகலில் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு, பரிசுத் தொகை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் வாங்க இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு, பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், இவை இரண்டும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture