விவசாயிகள் நலனுக்காக பாஜகவில் இணைந்துள்ளேன் : மநீம நிர்வாகி பேட்டி

விவசாயிகள் நலனுக்காக பாஜகவில் இணைந்துள்ளேன் : மநீம நிர்வாகி பேட்டி
X

விவசாயிகளின் நலன் கருதியே பாஜகவில் இணைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம், தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு விவசாயியாக இது பயனுள்ள திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில் தெரிவித்தேன்.

விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்காமல், கட்சியின் அடிப்படையில் முடிவு எடுத்தார்கள். திமுகவில் உள்ளது போல் நிலைப்பாடு எடுக்கிறார்கள். அப்படியெனில் எப்படி கட்சி மையமாக இருக்கும். பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!