மருத்துவம் படிக்க மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அமைச்சர் செங்கோட்டையன்

மருத்துவம் படிக்க மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு  அமைச்சர் செங்கோட்டையன்
X

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஆசிரியர் நகர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து ரூ 9. கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளுக்கான பூமி பூஜை, புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் பூமி பூஜை, பயனாளிகளுக்கு மாடு, ஆடு வளர்க்க கொட்டகை அமைக்க ஆணை வழங்குதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, பொது தேர்வு நடத்துவது குறித்து தமிழக முதல்வரின் விரிவான ஆலோசனைக்கு பிறகே அறிவிக்கப்படும். தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. கொரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. தமிழகத்தில் 11- புதிய மருத்துவ கல்லூரிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5 இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி