ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறப்பு காலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 15 ம் தேதி தொடங்கி டிசம்பர் 24 ம் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள் அவரை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். வருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் திறக்கப்பட்ட பரமபத வாசல் வழியாக பக்தர்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் பரமபத வாசல் வழியாக சென்று தரிசிக்க கோவில் நிர்வாகம் அனுமதிக்கபடுவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வரும் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் ( எண்ணெய் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற பரமபத வாசல் திறப்பின் நிகழ்சசியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu