உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை

பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரவு 11 மணி அளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.அப்போது, வழிபாட்டில் பங்கேற்றிருந்த பக்தா்கள் இறைப் புகழ்ச்சி வாசகங்களை முழங்கி வழிபட்டனா். பின்னா், பேராலய நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. பக்தா்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business