பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் காலமானார் -தலைவர்கள் அஞ்சலி
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஆளுமையாகவும் விளங்கியவர், 70 வயதில் முதுமை காரணமாக உடல் நலம் குன்றியிருந்தார். இந்த நிலையில், சற்று முன்னர் (வியாழன் இரவு) பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.ய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். ஆயிரக்கணக்கான ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.
தமிழகத்திலன் பண்பாட்டு ஆய்வுகளில் பேராசிரியர் தொ.பரமசிவனின் ஆய்வுகள் சான்றோர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய சிந்தனையில் அமைந்தவை.
அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், அறியப்படாத தமிழகம், தெய்வம் என்பதோர், இதுவே சனநாயகம், சமயங்களின் அரசியல், வழித்தடங்கள், பரண், சமயம், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், என 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு என்று மாணவர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், இலக்கிய அமைப்புகள் என பலரும் வருத்ததுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu