கமல்ஹாசன் தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா ? : அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

கமல்ஹாசன் தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா ? : அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி
X

நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வியெழுப்பினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை,தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். நாட்டில் இருக்கிறதை காட்டி கொள்வதற்காக ரகளை பண்ணுவதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவருக்கு முறையாக இருக்காது.

நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயரா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் , மனசாட்சிபடி நடிகர் கமலஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயாராக இருக்கிறோம், கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைத்துறையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து உள்ளது. திரைத்துறையினர் வைத்த கோரிக்கைளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் இடம் பெறுவதற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளது. ஹாலிவுட் அளவிற்கு தமிழ் திரைப்படத்துறை வளர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!