நிலம்,நீர்,காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: யுவராஜா குற்றச்சாட்டு

நிலம்,நீர்,காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: யுவராஜா குற்றச்சாட்டு
X

நிலம்,நீர்,காற்று என மூன்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக என தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டியின் போது கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது,2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் குற்றப்பத்திரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர்‌ மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். உண்மையில் ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. ஏனெனில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். அதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதும் திமுகவின் ஆட்சிதான். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றிலும் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர். எனவே ஊழல் குறித்து திமுக பேசக்கூடாது.நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. திமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டது. எனவே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

வேளாண் சட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு இருக்கின்ற நிலையில் மத்திய மாநில அரசுகள் அச்சட்டம் குறித்து பரிசீலனை செய்திட ஒவ்வொரு மாநில மாநிலத்திலும் அந்தந்த மாநில முதலமைச்சர் தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து திருத்த சட்டத்திற்கு முழு வடிவம் கொடுத்து அதன் பிறகு அதனை செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். பேட்டியின் போது, மாவட்ட தலைவர் அருண் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!