அரசு அனைத்து துறைகளிலும் புரட்சி படைக்கிறது : தமிழக முதல்வர் பெருமிதம்
தமிழக அரசு அனைத்து துறைகளிலும் புரட்சி படைத்து வருகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவில் நகர அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை பொருளாளர் முருகன் தம்பதியரின் மகள் ஹரிணி மற்றும் முருகனின் சகோதரி தெய்வானை சேதுபதி தம்பதியரின் மகள் அனுசியா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா சங்கரன்கோவில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, அன்பழகன், சரோஜா,உதயகுமார்,கடம்பூர் ராஜூ,காமராஜ்,பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள்,அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,அதிமுக என்றாலே மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தான் மனதில் தோன்றுகிறார்கள்.அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.அவர்கள் கண்ட கனவை இந்த அரசு நினைவாக்கிவருகிறது.கழகம் என்றாலே குடுமபம்.ஒரே குடும்பமாக இருந்து சிறப்பாக கழகத்தில் செயல்படுகிறோம்.
நாம் அனைவரும் ஒரே அணியாக இருப்பதால் தான் நாம் வலுவாக இருக்கிறோம்.ஏழை எளிய மக்களின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு பல திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்.7.5% உள் இடஒதுக்கீட்டில் பயன்பெற்று 313 பேர் மருத்துவபடிப்பை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.கிராம மக்களுக்கு தேவையான விவசாயத்தை பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மூலம் மழை நீரை சேமித்து வருகிறோம். கல்வி,நீர் மேலாண்மை,தொழில் ஆகியவையில் புரட்சி படைத்து வருகிறது இந்த அரசு எனவும் அனைத்து துறைகளிலும் புரட்சி படைத்து வெற்றிபெறுகிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu