எங்கள் ஆட்சி அமைந்ததும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவோம் : ஆ.ராசா

எங்கள் ஆட்சி அமைந்ததும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவோம் : ஆ.ராசா
X

அதிமுக அரசு ஊழல் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றம் செல்வோம் அங்கும் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்து எங்கள் ஆட்சி வரும்போது வழக்கு போடுவோம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்தார்.

சென்னை காசிமேட்டில் அதிமுகவில் நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் மீனவர் சமுதாய மக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர் ராசா வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர ராசா,திமுகவினர் மீது போடப்பட்ட எந்தவொரு ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை யாருக்கும் தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆனால் ஜெயலலிதா மீது அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத ஊழல்வாதி என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி தெரிவித்தார். ஆனால் இதற்கு அதிமுகவினரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.அதிமுக அரசு மீது இன்னும் எத்தனை ஊழல்கள் எங்களுக்குத் தெரிய வருகிறதோ அத்தனை ஊழல்களையும் வெளிப்படுத்துவோம். தமிழக ஆளனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வம் அங்கேயும் எடுக்கவில்லை என்றால் அடுத்த எங்கள் ஆட்சி மாறும்போது வழக்குப் போடுவோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!