தொழில் முனைவோருக்கு

தொழில் முனைவோருக்கு
X
தமிழகம் தொழில் வளத்தால் முன்னேறிய மாநிலமாக விளங்க வேண்டும், தமிழ்நாட்டில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும், அதற்குவணிகம் சார்ந்து நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுதலாக இந்த தொடர் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தொடரை எழுதுகிறேன். -சரவணன் தியாகராஜன்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு :

தமிழர்கள் உலகளவில் உயர்ந்து நிற்பது தமிழ் மொழியின் சிறப்பால் மட்டும் அல்ல, கடல் கடந்து பல நாடுகளுடன் மேற்கொண்ட வணிக தொடர்ப்பால் இன்றுபல நாடுகளில் தமிழர்கள் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் , சிலப்பதிகாரம், மணிமேகலை, மற்றும் பல தமிழ் இலக்கியங்கள் பழங்காலத்தில் இருந்து தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வணிகம் செய்ததை காட்டுகிறது. ராஜேந்திர சோழன் இந்தியபெருங்கடல் பகுதியை மிகப்பெரும் வணிக தலமாக கொண்டிருந்தான். வெள்ளையர் நம்மை ஆண்ட இடைப்பட்ட காலகட்டங்களில் 300 முதல் 400 ஆண்டுகளுக்குள் நம் தொலைத்தவற்றில் வணிகமும் , தொழில் சார்ந்த நம்முடைய பொருளாதாரமும் ஓன்று.

தொழில் வளத்தால் முன்னேற வேண்டும் :

மொழியால் தமிழ் சிறப்பாக இருந்தாலும் என்ன காரணத்துக்காக தமிழ் பல நாடுகளில் பேசப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் ஒரே ஒரு விஷயம் நன்கு தெரியும் " தமிழன் வணிகம் சார்ந்து உலகஅளவில் மிக முக்கியமான இடத்தில் இருந்திருக்கிறான். அதனால் உலகின் பல பகுதிகளில் தமிழ் அறியபட்டது என்பதே உண்மை " வாஸ்கோடகாமா இந்தியா வருவதற்கு முன்பே பட்டு வழிச்சாலை ( Silk Route ), மிளகு வழிச்சாலை(Spice Route ) என பல வழிப்பாதைகளில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வணிக வழிப்பாதையை கொண்டிருந்தோம் . மிளகை தேடி வந்த வாஸ்கோடகாமாவைத்தான் இந்தியாவை கண்டுபிடித்தார் என்று நம் சொல்கிறோம்.

பாரதி " இப்படி பழம் பெருமைகளை மட்டுமே பேசி கொண்டிருக்கக்கூடாது புதுமைகள் பல செய்யுங்கள் என்கிறார்.

அதற்காக தான் இந்த தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். தமிழகம் தொழில் வளத்தால் முன்னேறிய மாநிலமாக விளங்க வேண்டும், தமிழ்நாட்டில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் , அதற்குவணிகம் சார்ந்து நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்க வேண்டும் .

தற்போதைய காலாசூழ்நிலை :

தொழில் தொடங்குபவர்களுக்கு இப்போதைய காலாசூழ்நிலை மிக சாதகமாகவே உள்ளது , ஒரு காலத்தில் தொழில் தொடங்குவதற்கு சில வாய்ப்புகள் மட்டுமே இருந்தது .. வங்கியில் சென்று கடன் வாங்க வேண்டும், அல்லது தனியார் நிறுவனங்களிடம் சற்று கூடுதல் வட்டியில் கடன் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது . சிறு சிறு தொழில் தொடங்க மட்டமே அரசு சலுகை இருந்தது . இன்றைய கால கட்டம் அரசாங்கமே தொழில் முனைவோருக்கு நிறைய சலுகையினை தந்துள்ளது. உதாரணமாக முத்ரா , startup India , Atal Incubation Centers / Atal Innovation Mission இன்று இன்று எல்லா கல்லூரிகளிலும் செயல்படுகிறது இதன் பணி ஒரு கம்பெனியை உருவாக்குவதற்கான இடம், தொழில் நுட்ப திறன்களை வார்த்தல் , தேவையான நிதி உதவி போன்ற பணிகளை செய்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல உதவிகளை செய்கிறது என்று சொல்கிறோம் அதே போன்று நமக்கு தேவையான உதவிகளை பெற முடியும் , startup India வில் பதிவு செய்தால் மூன்று ஆண்டுகள் வரை புதிதாக தொடங்கிய நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை , இதையும் தாண்டி Seed Fund நிறுவனங்கள் சரியான நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் தேவையான நிதியுதவி செய்ய தயாராக உள்ளன. மற்றும் புதிதாக நிறுவனங்களை தொடங்குவதற்காக உங்களிடம் தெளிவான திட்டமிடல் , நிலையான வருவாயை எடுக்க முடியும் என்பதற்கான சூழல் , தொடர்ந்து தொழிலை நடத்த முடியும் என்று உறுதியாக தெரியும் பட்சத்தில் Angel Investor, Venture Capital போன்ற நிறுவனங்கள் நிதிஉதவி செய்ய தயாராக உள்ளன. தேவையான பணத்தை தருவதற்கு எல்லாரம் வந்துவிட்டார்கள், தகுதியான நபராக மாற வேண்டியது நமது வேலை. இரண்டாவது விஷயம் அதிர்ஷ்ட வசமான காலத்தில் உள்ளோம் தொழில் சார்ந்த தகவல்களை பெற வெப், அப்ளிகேஷன்ஸ் மற்றும் அரசு , தனியார் பயிற்சி நிறுவனங்கள் என அனைத்து வாய்ப்புகளும் உள்ள சரியான தருணமாக தொழில் முனைவோர்களுக்கு உள்ளது. இந்த நேரத்தில் தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களை விட தற்போது தொழில் ஆரம்பித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு தொழிலை ஆரம்பித்து ஜெயிப்பதற்கான சூழல் இப்போது பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நம் தொழில் முனைவோர்கள் எப்படி முன்னேறுவது , எப்படி புதிய தொழில்களை முன்னெடுப்பது, தொழிலை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, தொழிலில் எப்படி ஜெயிப்பது, எந்த தவறுகளை செய்யக்கூடாது, எந்த தவறுகளால் நிறுவனங்கள் மூடப்பட்டன, ஒரு தொழிலை தொடங்கி ஒருவன் நடத்துவதற்கு தேவையான நிதி சார்ந்த அறிவு என என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பற்றிய பல்வேறு தகவல்களை பார்ப்போம்.

Startupsஎன்று யாரை குறிப்பிடுகிறார்கள்?

தொழில் தொடங்கி வெற்றி பெறுவதற்கான சூட்சமங்கள் என்ன?

தொழில் தொடங்குவதற்கு அரசாங்கம் எவ்வாறு உதவி செய்கிறது? ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற அரசாங்க திட்டங்கள் எவ்வாறு கைகொடுக்கின்றன?

ஏன் தொழில் முனைவோர்கள் தோற்கிறார்கள்? அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது?

சீட் ஃபண்டிங், ஏஞ்சல் இன்வெஸ்டார், வென்ச்சர் கேப்பிட்டல் என்றால் என்ன? தொழில் தொடங்குவதற்கு இவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்?

வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கலாமா? சாதகம் என்ன? பாதகம் என்ன?

ஒரு தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டும் - ஒரு செக்லிஸ்ட்

ஒரு தொழிலை தொடங்கு பவர்க்கு நிதி மேலாண்மை பற்றிய புரிதல் அவசியம்?

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

தொழில் தொடங்கும் காலத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது?



வரும் தொடர்களில் பார்ப்போம்

சிந்தனை பெரியதாக இருக்கட்டும்! ஆனால் தொடக்கம் சிறியதாகவே இருக்கட்டும்!

- சரவணன் தியாகராஜன் .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil